உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விளையாட்டு துளிகள்

விளையாட்டு துளிகள்

மாவட்ட வாலிபால் ராணி மேரி கல்லுாரி 'சாம்பியன்' சென்னை:சென்னை மாவட்ட அளவில் நடந்த 'ஒலிம்பியாட் - 2025' விளையாட்டு போட்டியில், கல்லுாரி மாணவியருக்கான போட்டிகள், நேற்று முன்தினம் நிறைவடைந்தன. மூன்று சுற்றுகளாக நடந்த லீக் போட்டிகள் முடிவில், ராணி மேரி கல்லுாரி அணி, அதிக புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. இரண்டாவது இடத்தை ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வி அணி பிடித்தது.மாநில கிரிக்கெட் திண்டுக்கல் மாணவியர் அபாரம் சென்னை:மாநில அளவில் நடந்த பள்ளி மாணவியருக்கான கிரிக்கெட் போட்டியில், நாக் - அவுட் சுற்றுகள் முடிவில், கோவை, கூடலுார், திருவள்ளூர், ஈரோடு, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் உட்பட எட்டு அணிகள், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.ஒரு போட்டியிலும் தோல்வியடையாத திண்டுக்கல் அணி, முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றது. இரண்டாவது இடம் பெற்று கோவை அணி வெள்ளி பதக்கம், மூன்றாம் இடம் பெற்ற ஈரோடு அணி வெண்கல பதக்கங்களை வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி