உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா வியாபாரி கைது

கஞ்சா வியாபாரி கைது

வியாசர்பாடி:சென்னை, வியாசர்பாடி, அம்பேத்கர் நகரில் போலீசார் ரோந்து சென்ற போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரிடம் விசாரித்தனர். அவரது பையை சோதனையிட்ட போது, 1.5 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், வியாசர்பாடியை சேர்ந்த சந்தோஷ், 30 என்பதும், அவர் மீது பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை , போலீசார் கைது செய்தனர். பல்லாவரம், இங்க் தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பழவந்தாங்கலை சேர்ந்த கார்த்திக் என்கிற தொப்பை கார்த்திக், 22 என்பவரை, பல்லாவரம் போலீசார் கைது செய்தனர். கார்த்திக்கிடம் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ