உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

சென்னை,செங்கல்பட்டு, புது பஸ் ஸ்டாண்ட் அருகே, 2022 அக்., 17ல் சந்தேகத்துக்கு இடமான முறையில் பையுடன் நின்றிருந்த நபரை, காஞ்சிபுரம் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு போலீசார் விசாரித்தனர். அதில், அவர் துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து, 35 என்பதும், பையில் 11 பொட்டலங்களில், 22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போதைப்பொருள் கடத்தல் வழக்கில், இசக்கிமுத்துவை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, இசக்கிமுத்து மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு, 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ