காவு வாங்க காத்திருக்கும் குப்பை தொட்டிகள்
டி.பி.சத்திரம், ஐந்தாவது தெருவில், மாநகராட்சியினர் முறையாக குப்பை கையாளுவது கிடையtது. குப்பையை எடுத்து விட்டு, தொட்டிகளை சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் நடுரோட்டில் வைத்து விடுகின்றனர்.இதனால், சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், நிலை தடுமாறும் பட்சத்தில், குப்பை தொட்டியின் பிடிமான கம்பியில் இடித்து காயமடைகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நாராயணன்,டி.பி.சத்திரம்.