உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தீர்த்தவாரி மண்டபம் அருகே குப்பை கொட்டி மாசு

தீர்த்தவாரி மண்டபம் அருகே குப்பை கொட்டி மாசு

குன்றத்துார் அடுத்த கொல்லச்சேரி எல்லையில், அரசு ஆண்கள் பள்ளி எதிரே, சுப்ரமணிய சுவாமி கோவிலின் பழமையான தீர்த்தவாரி மண்டபம் உள்ளது. இதையொட்டி 65 சென்ட் நிலம் உள்ளது.இந்த இடத்தை சுற்றி ஆக்கிரமித்து, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், கொல்லச்சேரி ஊராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால், தீர்த்தவாரி மண்டபம் சேதமாகி வருகிறது.கோவிலுக்கு சொந்தமான இந்த நிலத்தை மீட்டு தீர்த்தவாரி மண்டபத்தை சீரமைக்க வேண்டும். காலியாக உள்ள நிலத்தில், கோவில் சார்பில் சமுதாய நலக்கூடம் கட்ட வேண்டும்.- கண்ணன், குன்றத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி