உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையோரம் குப்பை குவிப்பு குமணன்சாவடியில் அவதி

சாலையோரம் குப்பை குவிப்பு குமணன்சாவடியில் அவதி

பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சிறிய கட்டடத்தில், இட நெருக்கடியுடன் இயங்குகிறது. இதையடுத்து, இட வசதியுடன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், குமணன்சாவடியில் உள்ள அரசு கருவூலம் அலுவலகம் அருகே, 1.19 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.விரைவில், இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த கட்டடம் அருகே மலை போல் குப்பை கொட்டப்பட்டுள்ளது. மேலும், சாலையோரம் இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பை கொட்டப்பட்டுள்ளன. இதனால், அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியே செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர்.பூந்தமல்லி நகராட்சி மற்றும் காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை இங்கு கொட்டப்படுகிறது. இந்த இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை