உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கேட் விழுந்த விபத்து காவலாளி உயிரிழப்பு

கேட் விழுந்த விபத்து காவலாளி உயிரிழப்பு

மணலி, மணலிபுதுநகர், வெள்ளிவாயல் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி, 64. இவர், விச்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்தார்.கடந்த 14ம் தேதி காலை 9:00 மணியளவில், நிறுவனத்தின் பிரதான கேட்டை மூடும்போது, எதிர்பாராதவிதமாக கேட் அடியோடு சரிந்து, குமாரசாமி மேல் விழுந்தது. இதில், மார்பு, கால் பகுதியில் பலத்த காயமடைந்த குமாரசாமியை, அங்கிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து மீட்டனர். இந்த நிலையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமாரசாமி, நேற்று உயிரிழந்தார்.விபத்து குறித்து, மணலி புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ