உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கேலோ இந்தியா ரக்பி கால்பந்து சென்னை, பெங்களூரு சாம்பியன்

கேலோ இந்தியா ரக்பி கால்பந்து சென்னை, பெங்களூரு சாம்பியன்

சென்னை, 'கேலோ இந்தியா' ரக்பி கால்பந்து போட்டியில், சென்னை நட்டன் ஷார்க்ஸ், பெங்களூரு அணிகள் முதலிடங்களை பிடித்தன.தமிழ்நாடு ரக்பி கால்பந்து சங்கம் சார்பில், மத்திய அரசின் 'அஸ்மிதா கேலோ இந்தியா' பெண்கள் ரக்பி லீக் போட்டிகள், நேற்று முன்தினம் தொடங்கி, ஐ.சி.எப்., மைதானத்தில் நடக்கிறது.இதில், 15, 18 வயதுக்கு உட்பட்ட மற்றும் சீனியர் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. போட்டியில், 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில், ஆவடி அரசு பள்ளி, விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி, ஐ.சி.எப்., கிளப் என, 11 அணிகளும், 18 வயதில் டான்பாஸ்கோ அன்பு இல்லம், கடலுார் மாவட்ட அணி உட்பட ஐந்து அணிகளும் பங்கேற்றுள்ளன.சீனியர் பிரிவில், எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரி, ஜேப்பியார் கல்லுாரி உட்பட நான்கு அணிகள் என, மூன்று பிரிவுகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று காலை நடந்த 15 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கான இறுதிப் போட்டியில், சென்னை நட்டன் ஷார்க்ஸ் மற்றும் ஆவடி அரசு பள்ளி அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், 15 - 5 என்ற கோல் கணக்கில் நட்டன் ஷார்க்ஸ் அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.அதேபோல், 18 வயதுக்கு உட்பட பிரிவில், பெங்களூரு மற்றும் சென்னை நட்டன் ஷார்க்ஸ் அணிகள் மோதின. அதில், 5 - 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ