உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூளையில் ரத்தக்கசிவு முதியவருக்கு மறுவாழ்வு

மூளையில் ரத்தக்கசிவு முதியவருக்கு மறுவாழ்வு

சென்னை, மூளையில் ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு, குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை அளித்து, சென்னை காவேரி மருத்துவமனை, மறுவாழ்வு அளித்துள்ளது. இதுகுறித்து, அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: கடுமையான தலைவலி பாதிப்புடன் மருத்துவமனைக்கு வந்த, 65 வயது முதியவருக்கு பரிசோதனை செய்ததில், மூளையின் இடது புறத்தில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது அறுவை சிகிச்சையை தவிர்க்க, 'மிடில் மெனிஞ்சியல் ஆர்டரி எம்போலைசேஷன்' என்ற அதிநவீன குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை முறையை, கத்திரியக்கவியல் நிபுணர் சத்தியநாராயணன் தலைமையிலான குழுவினர் செய்தனர். இந்த அணுகுமுறையில், மீண்டும் ரத்தக்கசிவு ஏற்படக்கூடிய சிறிய தமனி அடைக்கப்பட்டது. இதன் வாயிலாக மீண்டும் ரத்தக்கசிவு ஏற்படும் பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது, நோயாளி நலமுடன் உள்ளார். இது போன்ற சிகிச்சைகள், மருத்துவமனைகளில் உள்ள மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான மருத்துவ தொழில்நுட்பங்கள் உதவியுடன் சாத்தியமாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை