பொது - 88 சவரன் நகைகள் திருடிய பட்டறை ஊழியர்கள் கைது
சென்னை:சூளை, ராஜா முத்தையா சாலையைச் சேர்ந்தவர் நரேஷ்குமார், 49. அதே பகுதியில். என்.கே.,ஜூவல்லரி என்ற பெயரில், நகைப்பட்டறை நடத்தி வருகிறார். கடந்த, 19ம் தேதி, பட்டறையில் நகைகளை சரிபார்த்தபோது, 706 கிராம் மதிப்பிலான நகை திருடுபோனது தெரியவந்தது.பணியில் இருந்த ஊழியர்களான மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா பதக் கீரா, 21, திபன்ஜன் பினி, 21, உள்ளிட்ட ஐந்து பேர், பணிக்கு வராமல் மொபைல் போனை அணைத்து வைத்திருந்ததும் தெரிந்தது.இதுகுறித்து அவர் அளித்த புகாரின்படி, பெரியமேடு போலீசார் வழக்கு பதிந்து, இரண்டு தனிப்படை அமைத்து, மேற்கண்ட ஐந்து பேரை தேடி வந்தனர்.மேற்கு வங்கத்தில் ஒரு வாரம் தங்கி, நகை பட்டறையில் திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ண பதக் கீரா, திபன்ஜன் பினி ஆகிய இருவரை பிடித்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களை கைது செய்த போலீசார், 377 கிராம் நகைகளை பறிமுதல் செய்தனர்.