உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஜார்க்கண்ட் நபர் பலி

3வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஜார்க்கண்ட் நபர் பலி

பெருங்களத்துார், பணியின்போது, மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து, ஜார்க்கண்ட் வாலிபர் உயிரிழந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சரண் குஜித், 21. அடையாறு பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அந்த நிறுவனம் மூலம், பெருங்களத்துார், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டியுள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில், நேற்று முன்தினம், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். மூன்றாவது மாடியில் கண்ணாடியை துடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, வண்டலுார் அடுத்த ஓட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு இறந்தார். இச்சம்பவம் குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி