உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளிகள், மயானங்களுக்கு ரூ.40 லட்சத்தில் ஜெனரேட்டர்

பள்ளிகள், மயானங்களுக்கு ரூ.40 லட்சத்தில் ஜெனரேட்டர்

ஆலந்துார்,ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்ட மாநகராட்சி பள்ளிகள், மயான பூமிகளில் கோடை மின் வெட்டை சமாளிக்கும் வகையில், ஜெனரேட்டர் பொருத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, ஆலந்துார், ஜால் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளி, நங்கநல்லுாரில் உள்ள சென்னை பள்ளி, ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணாபுரம், பழவந்தாங்கல், கண்ணன் காலனி மற்றும் முகலிவாக்கம், குன்றுமேடு மின் மயான பூமிகள் ஆகியவற்றில், 25 கி.வோ., மின் திறன் உடைய ஜெனரேட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விரைவில் பள்ளிகள், மயான பூமிகளில் ஜெனரேட்டர் பொருத்தப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ