உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2ம் கட்ட மெட்ரோ ரயில் டபுள்டெக்கர் பாதையில் கர்டர் பணிகள் நிறைவு

2ம் கட்ட மெட்ரோ ரயில் டபுள்டெக்கர் பாதையில் கர்டர் பணிகள் நிறைவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அமைய உள்ள, 'டபுள்டெக்கர்' பாதையில், 'கர்டர்கள்' அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, மூன்று வழித்தடங்களில் 63,246 கோடி ரூபாய் மதிப்பில், 119 கி.மீ., பணிகள் நடந்து வருகின்றன. மாதவரம் - சோழிங்கநல்லுார் மற்றும் பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் இடையேயான மெட்ரோ ரயில் பாதைகள் சில இடங்களில் இணைகிறது. குறிப்பாக, ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதிகளில், 'டபுள்டெக்கர் லைன்' எனப்படும் இரண்டு அடுக்கு மேம்பால பாதைகள் அமைகின்றன. பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் தடத்தில் ஒரு பகுதியாக, போரூர் முதல் பவர்ஹவுஸ் வரை மேம்பால மெட்ரோ ரயில் பாதை கட்டுமானத்தில், ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 8 கி.மீ., துாரத்துக்கான மேம்பால பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் அசோக் குமார், ரேகா பிரகாஷ் உட்பட பலர் இருந்தனர். இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ரயில் பாதைக்கான, 'கர்டர்கள்' அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. போரூர் முதல் பவர்ஹவுஸ் வரை மேம்பால மெட்ரோ ரயில் பாதை கட்டுமானத்தில், ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 8 கி.மீ., துாரத்துக்கான மேம்பாலப் பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, இதன் மீது ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் விரைவுப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை