உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமி தற்கொலையில் திருப்பம் காதலனே கொன்றது அம்பலம்

சிறுமி தற்கொலையில் திருப்பம் காதலனே கொன்றது அம்பலம்

குன்றத்துார்:ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோமா கோபா, 19. இவர், அதே பகுதியை சேர்ந்த யாஷ்மதி போபோங், 16, என்ற சிறுமியை காதலித்து வந்தார்.ஒரு மாதத்திற்கு முன், ஜார்க்கண்டில் இருந்து சிறுமியை அழைத்து வந்து, குன்றத்துார் அருகே நந்தம்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இருவருக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 29ம் தேதி, சிறுமி யாஷ்மதி போபோங் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.குன்றத்துார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சோமா கோபாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமியின் கழுத்தில் காயம் இருப்பதும், கழுத்து எலும்பு உடைந்திருப்பதும் தெரிய வந்தது.போலீசாரின் தொடர் விசாரணையில், சோமா கோபா வேறொரு பெண்ணிடம் பழகியதை, யாஷ்மதி கண்டித்துள்ளார்.இதனால் கோபம் அடைந்த சோமா கோபா, யாஷ்மதியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, தற்கொலை செய்ததைப்போல் நாடகமாடியுள்ளார்.இந்த வழக்கில் தொடர்புடைய சோமா கோபாவின் நண்பர்களிடமும், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !