உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  70 சதவீத விலை குறைப்பில் ஜிஸ்கொயர் வீட்டு மனை

 70 சதவீத விலை குறைப்பில் ஜிஸ்கொயர் வீட்டு மனை

சென்னை: சந்தை விலையைவிட, 70 சதவீதம் குறைந்த விலையில், 'ஜி ஸ்கொர் எடர்னா' திட்டத்தில் வீட்டு மனைகள் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: சென்னை பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார் இடையே தண்டலம் பகுதியில், சவீதா மருத்துவ கல்லுாரி பின்புறம், 'ஜி ஸ்கொயர் எடர்னா' வில்லா மனைப்பிரிவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு, 8.56 ஏக்கர் நிலத்தில், 154 பிரீமியம் வில்லா மனைகள் அடங்கிய திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில், 24 வகையான உலகதரத்தில் சிறப்பு வசதிகள் செய்யப்படும். ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் மிக முக்கியமான இடத்தில் இத்திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், முதலில் முன்பதிவு செய்யும் 15 பேருக்கு சதுர அடி, 1,790 ரூபாய் விலையில் வில்லா மனைகள் வழங்கப்படும். இப்பகுதியில் சந்தை நிலவரப்படி, ஒரு சதுர அடி, 6,000 ரூபாயாக உள்ளது. ஸ்ரீபெரும்புதுாரில் சதுர அடி, 4,000 ரூபாயாக உள்ளது. இந்த சந்தை நிலவரத்தைவிட, 70 சதவீதம் குறைந்த விலையில், வில்லா மனைகள் வழங் கப்படும். இங்கு, 1,000 சதுர அடி வில்லா மனைகளை, 18 லட்சம் ரூபாய்க்கு வழங்குகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான பாலா ராமஜெயம் கூறுகையில், ''பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார் இடையே, இதுவரை காணாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜி ஸ்கொயரின் திட்டம் வாயிலாக, மக்கள் மிக குறைந்த விலையில் வில்லா ம னைகளை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ