உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் பாய்ந்து ஆடு உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஆடு உயிரிழப்பு

பெரம்பூர்,பெரம்பூர், அருந்ததி நகர் போலேரியம்மன் கோவில் தெரு மற்றும் எலிகான் தெரு சந்திப்பில், நாகராஜ் என்பவருக்கு சொந்தமான ஆடு, நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது, அதன் மீது திடீரென மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் துடிதுடித்து இறந்தது.இதை கவனித்த அப்பகுதியினர், சவுக்கு கட்டைகளால் ஆட்டை எடுத்து, மரப்பலகை மீது கிடத்தினர். மேலும், அவ்வழியே யாரும் செல்லாத வகையில், சுற்றி தடுப்புகளையும் அமைத்தனர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த மின் வாரியத்தினர் சோதித்த பின், மின் வாரிய வடம் எதுவும் சேதமடையவில்லை. மாநகராட்சி தெரு மின் விளக்கு கம்பம் வாயிலாக மின்சாரம் பாய்ந்து, ஆடு இறந்திருக்கலாம் என்றனர். அப்பகுதியைச் சேர்ந்த பரந்தாமன், 45, என்பவர் கூறுகையில், “மாலையில் மட்டுமே, தெரு விளக்கு எரியும். அப்போது தான் மின்சாரம் வினியோகிக்கப்படும். “புதைக்கப்பட்ட மின் வடத்தில், மழைநீர் தேங்கியிருந்ததால் மின் கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அதை, மின் வாரியத்தினர் ஆய்வு செய்யாமல் பதில் மட்டும் கூறி செல்கின்றனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ