உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நேர்மைக்கு தங்க மோதிரம் பரிசு

நேர்மைக்கு தங்க மோதிரம் பரிசு

அயப்பாக்கம், அயப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பணியாற்றும், திருச்சியைச் சேர்ந்த ஜெயமணி, 45, துாய்மை பணி மேற்கொண்டார். வைரம் உள்ளிட்ட நகைகள் இருந்த பை கிடைத்தது. உடனே போலீசாரிடம் ஒப்படைத்தார்.விசாரணையில், கடந்த 27ம் தேதி நடந்த திருமணத்திற்கு வந்திருந்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் - மீனாட்சி தம்பதி, தவறவிட்டது தெரிந்தது. 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் அடங்கிய பை, நேற்று தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயமணியின் நேர்மையை பாராட்டி, தம்பதி அவருக்கு அரை சவரன் மோதிரத்தை பரிசளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை