உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆம்னி பேருந்து மோதி அரசு பஸ் ஓட்டுநர் பலி

ஆம்னி பேருந்து மோதி அரசு பஸ் ஓட்டுநர் பலி

மதுராந்தகம், மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 58. இவர், மதுராந்தகம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் பணிமனைக்கு சென்றுள்ளார். மதுராந்தகம் பணிமனை எதிரே, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து திருச்சி சென்ற தனியார் ஆம்னி பேருந்து, இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுராந்தகம் போலீசார், உடலை மீட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தனியார் சொகுசு பேருந்தை பறிமுதல் செய்து, தலைமறைவான ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை