உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உதயநிதிக்கு அரசு டாக்டர்கள் வேண்டுகோள்

உதயநிதிக்கு அரசு டாக்டர்கள் வேண்டுகோள்

சென்னை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை, வெளியிட்டுள்ள அறிக்கை; இன்று நவம்பர் 27 பிறந்த நாள் கொண்டாடும் துணை முதல்வர் தன்னுடைய பிறந்த நாள் பரிசாக அரசு மருத்துவர்களுக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். திமுக ஆட்சி அமைந்த பிறகு, மருத்துவர் சங்க நிர்வாகிகள் மற்றும் மறைந்த டாக்டர் லட்சுமி நரசிம்மன் மனைவி மற்றும் மகன்களுடன் துணை முதல்வரை 2 முறை நேரில் சந்தித்து, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தோம். அப்போது மறைந்த டாக்டர் லட்சுமி நரசிம்மன் ஆற்றிய சேவைகள் மற்றும் தியாகம் குறித்து உதயநிதி பெருமையாக குறிப்பிட்டார்.மேலும் அரசு மருத்துவர்களின் கோரிக்கை குறித்து, வெகு விரைவில் தமிழக முதல்வரிடம் எடுத்து சென்று கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக மருத்துவர்களிடம் உறுதியளித்தார். ஆனால் இன்று வரை சொன்னதை செய்யவில்லை.மருத்துவர்கள் புதிதாக ஊதிய உயர்வு எதுவுமே கேட்கவில்லை. ஏற்கனவே இருக்கின்ற அரசாணை 354 ஐ அமல்படுத்த தான் கேட்கிறோம்.அரசாணை 354 ஐ அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம், அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதோடு, கருணாநிதிக்கு பெருமை சேர்ப்பதாகவும் அமையும் என்ற வகையில் இரட்டிப்பு மக்கிழ்ச்சி. அதுவும் இந்த கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JANA VEL
நவ 27, 2025 13:41

அரசுக்கு கூடுதலாக ரூபாய் 300 கோடி மட்டும் செலவு. டாஸ்மாக் ஒரு அரை மணிநேரம் கூடுதலாக திறந்தால் சரியாகிவிடும் என்று சொல்லிப்பாருங்கள்... கண்டிப்பாக செய்வார் ... டாஸ்மாக் ஒரு அரை மணிநேரம் கூடுதலாக திறப்பார்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ