உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  அரசு சிற்றுந்தில் மாணவியிடம் சீண்டல்

 அரசு சிற்றுந்தில் மாணவியிடம் சீண்டல்

மதுரவாயல்: மதுரவாயலில் அரசு சிற்றுந்தில் பயணித்த கல்லுாரி மாணவியிடம், நடத்துனர் பாலியல் சீண்டல் ஈடுபட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மதுரவாயலில் இருந்து, வளசரவாக்கம் செல்லக்கூடிய தடம் எண் '25எஸ்' அரசு சிற்றுந்தில், 19 வயது கல்லுாரி மாணவி, நேற்று முன்தினம் பயணம் செய்தார். நடத்துநர் ஆனந்தராஜ், மாணவியிடம் டிக்கெட் கொடுப்பதுபோல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மாணவி, நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சிற்றுந்து, மதுரவாயல் ஏரிக்கரை அருகே சாலையின் நடுவே நிறுத்தப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த மாணவியின் உறவினர்கள், நடத்துநரை தாக்கினர். மதுரவாயல் போலீசார் வந்து, ஓட்டுநர் ஆனந்தராஜை, காவல் நிலையம் அழைத்து சென்றனர். மாணவியிடம் அவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டாரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி