மெட்ரோ ரயில் தலைமையகத்துக்கு பசுமை சான்று
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம், நந்தனத்தில் 12 அடுக்குமாடியில் செயல்படுகிறது. வழக்கமான கட்டடங்கள் போல் இல்லாமல், இதில் பசுமை கட்டுமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்த பரப்பளவில், 79 சதவீத இடங்கள் பசுமை பரப்பாக பராமரிக்கப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களுக்காக, நந்தனம் மெட்ரோ ரயில் தலைமையக கட்டடத்துக்கு, பிளாட்டினம் வகை பசுமை கட்டட சான்று, ஐ.ஜி.பி.சி., எனும் இந்திய பசுமை கட்டடங்கள் கவுன்சில் வழங்கியுள்ளது.