உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபத்தில் மணமகன் தாய் பலி சோகத்தில் திருமண வீடு

விபத்தில் மணமகன் தாய் பலி சோகத்தில் திருமண வீடு

செங்கல்பட்டு செங்கல்பட்டு, பட்ரவாக்கம் அடுத்த தேனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 60. இவரது மனைவி கோகிலா, 53. தம்பதிக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.இரண்டாவது மகன் ஆனந்த் என்பவருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்ததால், தேவையான பொருட்கள் வாங்க குமார் - கோகிலா தம்பதி, 'டி.வி.எஸ்., ஸ்கூட்டி'யில் நேற்று செங்கல்பட்டு சென்றனர்.செங்கல்பட்டு வல்லம் ரயில்வே மேம்பாலம் மீது சென்ற போது, பின்னால் வந்த டாரஸ் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த கோகிலா மீது, லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கோகிலா உயிரிழந்தார். குமார் லேசான காயத்துடன் தப்பினார். தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், கோகிலா உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிந்து, டாரஸ் லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். இதனால், திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ