உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் ஜி.எஸ்.டி., மாநாடு ஒருங்கிணைந்த வரி தீர்வுகள்

சென்னையில் ஜி.எஸ்.டி., மாநாடு ஒருங்கிணைந்த வரி தீர்வுகள்

சென்னை, 'ஒருங்கிணைந்த வரி தீர்வுகள், ஒருங்கிணைந்து உருவாக்குவோம்' என்ற தலைப்பில், ஜி.எஸ்.டி., மாநாடு கிண்டியில் வெற்றிகரமாக நடந்தது.சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி., கமிஷனரகம் சார்பில், 'ஜி.எஸ்.டி., - 2025' மாநாடு, நேற்று முன்தினம் கிண்டியில் நடந்தது. ஜி.எஸ்.டி., எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடந்த இதில், 'ஒருங்கிணைந்த வரி தீர்வுகளை ஒருங்கிணைந்து உருவாக்குவோம்' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.மாநாட்டில் வரி நிர்வாகிகள், தொழில் துறை தலைவர்கள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட வல்லுநர்கள் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு, இ - பில்லிங் ஆகிய நடைமுறைகளை எளிதாக்கும் முக்கிய கருத்துக்கள் குறித்து பேசினர். ஜி.எஸ்.டி., வரியை எப்படி கையாள்வது, வியாபாரிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிகழ்வில், சென்னை ஜி.எஸ்.டி., கமிஷனர் நஷீர் கான், மெட்ராஸ் சேம்பர் அசோஷியேட் உறுப்பினர் வைத்தீஸ்வரன், என்.ஐ.சி., துணை தலைமை இயக்குனர் பட், ஜி.எஸ்.டி.என்., துணைத் தலைவர் பாலாஜி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை