உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிண்டி ரேஸ்கோர்ஸ் குளங்கள் நிரம்பின

 கிண்டி ரேஸ்கோர்ஸ் குளங்கள் நிரம்பின

சென்னை: கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்ட நான்கு குளங்களும் நிரம்பி, கிண்டி, வேளச்சேரி குடியிருப்பு புகுதிகளில் ஏற்படும் மழைநீர் தேக்கம் தவிர்க்கப்பட்டுள்ளது என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: அடையாறு மண்டலம் கிண்டி ரேஸ்கோர்ஸ் வளாகத்தில், 1.10 லட்சம் கன மீட்டர் கொள் ளளவு தண்ணீர் தேக்கம் திறனுடன் புனரமைக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த நான்கு குளங்களின் கொள்ளளவை இரட்டிப்பாக அதிகரிக்கும் வகையில், 49,072 ச.மீ., பரப்பளவில், 24.53 கோடி லிட்டர் மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, 'டிட்வா' புயல் காரணமாக பெய்து வரும் மழையில், நான்கு குளங்களும் நிரம்பி உள்ளன. இதன் காரணமாக, கிண்டி, மடுவின்கரை, வேளச்சேரி, வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, ஐந்து பர்லாங் சாலை ஆகிய பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பு இன்றி, அப்பகுதி மக்கள் பயனடைந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ