உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எழும்பூரில் ரயில் பயணியர் மூவரிடம் ஹவாலா பணம் 32.44 லட்சம் பறிமுதல்

எழும்பூரில் ரயில் பயணியர் மூவரிடம் ஹவாலா பணம் 32.44 லட்சம் பறிமுதல்

சென்னை, சர்க்கார் விரைவு ரயிலில் எழும்பூர் வந்தடைந்த மூன்று பயணியரிடம் இருந்து, 33.44 லட்சம் ரூபாயை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். ஹவாலா பணம் என்பதால், வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.அப்போது, தெலுங்கானா மாநிலம், காச்சிகுடாவில் இருந்து, சர்க்கார் விரைவு ரயில் நேற்று காலை 6:05 மணிக்கு, எழும்பூரில் நடைமேடை எண் 9 ல் வந்தது.போலீசார் நடத்திய சோதனையின்போது, டிராலி சூட்கேசுடன் வந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.ஒருவரின் பையை திறக்கும்படி போலீசார் கூறியபோது தயங்கினர். எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.பையை திறந்து பார்த்தபோது, செய்தித்தாள்களால் சுற்றப்பட்டு, 32 லட்சத்து 44,790 ரூபாய் கட்டுக் கட்டாக இருந்தது.இந்த பணத்திற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை. பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.விசாரணையில், பெரம்பூரை சேர்ந்த அசோக் ஜெயின் 51, பட்டாளத்தை சேர்ந்த சாகில் ஜெயின் 26, சவுகார்பேட்டையை சேர்ந்த சங்கீதா 50, என்பது தெரியவந்தது. இந்த ஹவாலா பணம் குறித்து, மேற்கண்ட மூன்று பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ