உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உடல் எடை குறைப்பிற்கு நலம் கிளினிக் துவக்கம்

உடல் எடை குறைப்பிற்கு நலம் கிளினிக் துவக்கம்

சென்னை, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில், உடல் எடையை குறைக்கும், 'நலம்' கிளினிக்கை, நடிகை குஷ்பு துவக்கி வைத்தார்.இதுகுறித்து, மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரசாத் ராஜகோபாலன் மற்றும் இயக்குநர் உர்ஜிதா ராஜகோபாலன் ஆகியோர் கூறியதாவது:அளவுக்கு அதிக உடல் எடையும், பருமனும், மிகவும் கவலை ஏற்படுத்தும் பொது சுகாதார பிரச்னைகளாக உருவெடுத்து உள்ளது. உலகளவில் எட்டு பேரில் ஒருவர், உடல் பருமன் பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.இந்தியாவில், 24 சதவீத பெண்களும், 23 சதவீத ஆண்களும், 8 சதவீத சிறார்களும் உடல் பருமானால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உடல் பருமனால், பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.இவ்வாறான பாதிப்புகளால் அவதிப்படுவோருக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், நலம் கிளினிக் துவங்கப்பட்டுள்ளது.இதில், உணவு முறை நிபுணர்கள், உளவியலாளர்கள், இயன்முறை சிகிச்சை, அறுவை சிகிச்சை டாக்டர்கள் உள்ளிட்ட பல துறை டாக்டர்கள் முழுமையான சிகிச்சை அளிப்பர். ஒவ்வொருவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழும் வரை, அவர்களுடன் நாங்கள் பயணிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி