உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை முழுதும் ஆக்கிரமித்த குப்பையால் சுகாதார சீர்கேடு

சாலை முழுதும் ஆக்கிரமித்த குப்பையால் சுகாதார சீர்கேடு

ஷெனாய் நகர்: அண்ணா நகர் மண்டலம், அமைந்தகரை அருகில் உள்ள ஷெனாய் நகரில், ஈஸ்ட் கிளப் சாலை உள்ளது.கீழ்ப்பாக்கம் கல்லறை சாலை மற்றும் அமைந்தகரை மெட்ரோ அருகில் உள்ள இச்சாலையில் போதிய பாராமரிப்பு இல்லாததால், சாலையின் பாதி அளவிற்கு குப்பை மட்டுமே சிதறியுள்ளன.அப்பகுதியில் வசிப்போர் கூறியதாவது:ஷெனாய் நகர், ஈஸ்ட் கிளப் சாலையில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதிவாசிகள் குப்பையை சாலையிலேயே வீசிவிட்டு செல்கின்றனர்.இப்பகுதியில், மாநகராட்சி ஊழியர்கள் முறையாக குப்பையை கையாள்வது இல்லை. சாலையில் தேங்கும் குப்பையை கூட அகற்றுவதில்லை.அதனால், ஷெனாய் நகர் சுற்றுவட்டார பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் அபாயம் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ