உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, தி.மு.க., தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, 2023ம் ஆண்டு தி.மு.க., பைல்ஸ் வெளியிட்டார். இதில், தி.மு.க., பொருளாளர் பாலு உள்ளிட்டோரின் சொத்துகள் குறித்த பட்டியலை வெளியிட்டார். பொய்யான கருத்துகள் தெரிவித்ததாக கூறி, அண்ணாமலைக்கு எதிராக, பாலு சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். நேற்று நடந்த விசாரணையில், அண்ணாமலை ஆஜரானார். பாலு ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை, டிச., 24ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை