உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமறைவு ரவுடி கைது

தலைமறைவு ரவுடி கைது

கொடுங்கையூர், சென்னை, செங்குன்றம், லட்சுமிபுரத்தை சேர்ந்த ரவுடி காமேஷ், 43, மீது கொலை வழக்கு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.கொடுங்கையூரில் நடந்த கொலை வழக்கு ஒன்றில், கடந்த மூன்று மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல், காமேஷ் தலைமறைவானார்.காமேஷை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. காமேஷை போலீசார் தேடி வந்த நிலையில், கொடுங்கையூர், குப்பைமேடு அருகே வாகன சோதனையில் அவர் சிக்கினார். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புளியந்தோப்பு, கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் கணேஷ், 34; கூலித் தொழிலாளி. இவர், இரு தினங்களுக்கு முன், குடியிருப்பின் லிப்டில் ஏற காத்திருந்தார்.அப்போது, அடையாளம் தெரியாத ரவுடிகள் மூவர் மது போதையில், கணேசிடம் தகராறு செய்து கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்படி, 'சிசிடிவி' காட்சிகளை வைத்து ரவுடி கும்பலை பேசின்பாலம் காவல் நிலைய போலீசார் தேடி வந்தனர். இதில், சூளையைச் சேர்ந்த ரிச்சர்ஸ், 24, என்பவரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய அருண்குமார், 20, மற்றும் நரசிம்மா, 22, ஆகியோரை, வேறொரு வழக்கில், வேப்பேரி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ