குடிநீர் லாரி மோதி மருத்துவமனை ஊழியர் பலி
போரூர், போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 55; தனியார் மருத்துவமனை'லிப்ட்' ஆப்பரேட்டர்.நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, பரங்கிமலை - பூந்தமல்லி நெடுஞ்சாலை, அய்யப்பன்தாங்கல் அருகே, நடந்து சென்ற போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது.இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், வெங்கடேசன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் ரகு, 45, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.