துாய்மை பணியாளர்களுக்கு ஏசி ஹோட்டலில் உபசரிப்பு
வேளச்சேரி, அடையாறு மண்டலம், 176வது வார்டில், 140 துாய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். 'து ாய்மை இந்தியா' திட்டத்தை சிறப்பிக்கும் விதமாக, அதே வார்டு, ஏ.ஜி.எஸ்., காலனி குடியிருப்போர் நல சங்கம் சார்பில், அப்பகுதியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களை கவுரவிக்க முடிவு செய்தனர். நேற்று மதியம், வேளச்சேரியில் உள்ள ஒரு 'ஏசி' ஹோட்டலுக்கு அழைத்து சென்று, 140 பேருக்கு நலச்சங்க நிர்வாகிகள் உணவு பரிமாறி உபசரித்தனர்.