மேலும் செய்திகள்
போதைப்பொருள் கடத்தல்: ஐ.டி., ஊழியர் கைது
15-Nov-2024
விருகம்பாக்கம், நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர் ஆகாஷ், 18. இவர், சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள பாலாஜி பவன் ஹோட்டலில் தங்கி, அங்கேயே கிளீனராக ஆறு மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, ஹோட்டல் அடைக்கப்பட்ட பின், தரையில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, ஸ்விட்ச் பாக்ஸில் தண்ணீர் பட்டதில், மின்சாரம் பாய்ந்து ஆகாஷ் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தோர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Nov-2024