உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தீ விபத்தில் வீடு தரைமட்டம் :சிலிண்டர் வெடித்தால் பரபரப்பு

தீ விபத்தில் வீடு தரைமட்டம் :சிலிண்டர் வெடித்தால் பரபரப்பு

அம்பத்துார்: தீ விபத்து ஏற்பட்ட வீட்டில், 'காஸ்' சிலிண்டர் வெடித்து சிதறியதில் சுவர்கள் இடிந்து தரைமட்டமானது. அம்பத்துார், அன்னை இந்திரா நகர், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சூர்யமூர்த்தி, 27. இவரது மனைவி உமா மகேஸ்வரி, 23. காலை சூர்யமூர்த்தி பணிக்குச் சென்ற நிலையில், உமா மகேஸ்வரி தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். மாலை 4:30 மணியளவில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்தில் வீடு முழுதும் மளமளவென பரவியது. அந்நேரம், வீட்டில் இருந்த 'காஸ்' சிலிண்டர், பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் சுவர்கள், சிமென்ட் கூரை உள்ளிட்டவை இடிந்து வீடு தரைமட்டமானது. அருகில் உள்ள வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கழிப்பறை கதவுகளும் உடைந்தன. இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை