வீட்டின் பூட்டை உடைத்து போன், லேப்டாப் திருட்டு
திருமுல்லைவாயல் பட்டப்பகலில், வீட்டின் பூட்டை உடைத்து, மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருமுல்லைவாயில் அடுத்த அயப்பாக்கம், அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர்கள் ராம்சித்தார்த், 30, முத்துமலை, 28. இருவரும், அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, வேலை முடித்து வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த இரண்டு மொபைல் போன்கள் மற்றும் இரண்டு லேப்டாப் திருடு போனது தெரிந்தது.புகாரின்படி, திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.