உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  முதலிரவில் மனைவியை சுத்தியால் தாக்கிய கணவர் கைது

 முதலிரவில் மனைவியை சுத்தியால் தாக்கிய கணவர் கைது

வேப்பேரி: புரசைவாக்கம், பார்த்தசாரதி தெரு வைச் சேர்ந்தவர் அகஸ்டின் ஜோஷ்வா, 33, என்பவருக்கும், திருத்தணியைச் சேர்ந்த, 24 வயது பெண்ணுக்கும், பெற்றோர் சம்மதத்துடன் இரு நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கணவர் வீட்டில் முதலிரவு நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அறைக்குள், தாம்பத்யம் சம்பந்தமாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த அகஸ்டின் ஜோஷ்வா, மனைவியை கைகளால் தாக்கினார். பின், ஆத்திரம் தீராததால், வீட்டில் இருந்து சுத்தியலை எடுத்துவந்து, மனைவியை கடுமையாக தாக்கினார். இதில் இரண்டு கால்கள், கைகள், நெற்றியில், மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த புதுப்பெண், அவரது சகோதரிக்கு மொபைல்போனில் தொடர்பு கொண்டு, நடந்ததை நேற்று கூறியுள்ளார். அவர் வந்து, புது பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தார். வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை சுத்தியால் கொடூரமாக தாக்கிய அகஸ்டின் ஜோஷ்வாவை நேற்று இரவு கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ