மனைவி மற்றும் மாமியாரை பிளேடால் கிழித்த கணவர் கைது
அசோக் நகர்,அசோக் நகர் 21வது தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ், 29; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி பவானி, 26. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து, லோகேஷ் மனைவியுடன் சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தனால், விரக்தியடைந்த பவானி, நான்கு மாதங்களுக்கு முன் லோகேைஷ பிரிந்து, மேற்கு மாம்பலம், கிரி தெருவில் உள்ள தாய் பர்வத வர்த்தினி, 50, வீட்டிற்கு சென்றார்.இந்நிலையில், மனைவியை சமாதானம் செய்து அழைத்து செல்ல, பர்வத வர்த்தினியின் வீட்டிற்கு, நேற்று முன்தினம் இரவு மது போதையில் லோகேஷ் சென்றுள்ளார். ஆனால், அவருடன் செல்வதற்கு பவானி மறுத்துள்ளார். பர்வத வர்த்தினியும் மகளை அனுப்ப மாட்டேன் எனக் கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ், மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து பவானியின் வலது கையில் கிழித்தார். தடுக்க முற்பட்ட, அவரது தாய் பர்வத வர்த்தினியின் முதுகில் பிளேடால் கிழித்தார்.ரத்த காயமடைந்த இரண்டு பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பவானிக்கு கையில் ஏற்பட்ட காயத்திற்கு ஐந்து தையல்களும், அவரது தாய்க்கு முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு 10 தையல்களும் போடப்பட்டன. இது குறித்து விசாரித்த அசோக் நகர் போலீசார், லோகேஷை நேற்று கைது செய்தனர்.