மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் கைது
சென்னை,மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த 2024ம் ஆண்டு, 37 வயது பெண் ஒருவர், அவரது கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்திருந்தார். இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த ஜூலை 6ம் தேதி, அவரது கணவர் ராமச்சந்திரன், 44, அவதுாறாக பேசியதுடன், சாட்சி சொல்லக்கூடாது எனவும், அப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, ராமச்சந்திரனின் மனைவி மீண்டும் ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, நேற்று திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன், கேரளா மாநிலத்தில், தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார்.