மனைவியின் கள்ளக்காதலனை நாயை ஏவி கடிக்க விட்ட கணவர்
கண்ணகிநகர் :மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை, நாயை ஏவி கடிக்க விட்ட கணவரை, போலீசார் கைது செய்தனர். கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகராஜன், 30. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்பெண்ணின் கணவர் சந்துரு, 32, நாகராஜனை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று முன்தினம் நடந்த தகராறில், சந்துரு தன் வீட்டில் உள்ள நாயை ஏவி விட்டு, நாகராஜனை கடிக்க வைத்துள்ளார். இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கண்ணகி நகர் போலீசார், சந்துருவை கைது செய்து விசாரிக்கின்றனர்.