உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கணவர் கண்முன் மனைவி லாரி சக்கரத்தில் சிக்கி பலி

கணவர் கண்முன் மனைவி லாரி சக்கரத்தில் சிக்கி பலி

சென்னை, திருவேற்காடு, கணபதி நகரைச் சேர்ந்தவர் பெருமாள், 55. அவரது மனைவி இசக்கி அம்மாள், 50.இருவரும், நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு ரோகிணி திரையரங்கில், விடாமுயற்சி திரைப்படத்தை காண, இருசக்கர வாகனத்தில் சென்றனர்.வானகரம் சிக்னல் அருகே, வாகனம் நிலை தடுமாறி இருவரும் விழுந்தனர். அப்போது, கோயம்பேடு நோக்கி சென்ற டாரஸ் லாரி சக்கரம், இசக்கி அம்மாள் மீது ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சிறு காயங்களுடன் கணவர் தப்பினார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து ஏற்படுத்தி தலைமறைவான லாரி ஓட்டுநரை, போலீசார் தேடுகின்றனர். இந்த விபத்தால், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ