உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பரிதாபகரமான நிலையில் ஐ.ஏ.எப்., சாலை

பரிதாபகரமான நிலையில் ஐ.ஏ.எப்., சாலை

ஆவடி, ஆவடி மிட்னமல்லி, முத்தாபுதுப்பேட்டை, உழைப்பாளர் நகர், ராஜிவ் காந்தி நகரில் 40,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு, மத்திய அரசுக்கு சொந்தமான எச்.வி.எப்., - சி.ஆர்.பி.எப்., இந்திய விமானப்படை, ராணுவப்படை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள மிட்னமல்லி, ஐ.ஏ.எப்., சாலை, பட்டாபிராம் ஐ.ஏ.எப்., சாலைகள், முறையான பராமரிப்பில்லாத காரணத்தால், பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் தினமும் '8' போட்டபடி விபத்து அபாயத்திலே பயணம் மேற்கொள்கின்றனர்.மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சாலை என்பதால், புது சாலை அமைக்க முடியாமல் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ