உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரிக்கெட் கிளப்பில் உடும்பு இறப்பு? வனத்துறை விசாரணை

கிரிக்கெட் கிளப்பில் உடும்பு இறப்பு? வனத்துறை விசாரணை

சென்னை: மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில், உடும்பு இறந்து கிடந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சேப்பாக்கத்தில் உள்ள, 'மெட்ராஸ் சென்னை கிரிக்கெட் கிளப்'பில், 3 அடி நீளம் கொண்ட அரியவகை உடும்பு, நேற்று முன்தினம் இறந்து கிடந்தது. இதை பார்த்த ஒருவர், கிண்டியில் உள்ள வனத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். வனத்துறை அதிகாரிகள் இறந்த உடும்பை மீட்டனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரிய வகை உடும்பு நகர் பகுதிகளுக்கு வர வாய்ப்பில்லை. சட்ட விரோதமாக யாராவது வளர்த்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. உடும்பை உணவுக்காக யாராவது பிடித்து கொண்டு வந்தார்களா; இல்லை மைதான பகுதிக்கு வந்ததை அடித்து கொன்றார்களா என்று தெரியவில்லை. இதுகுறித்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ