உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பருவமழை பாதிப்பு புகார்களுக்கு உடனடி தீர்வு: மேயர் பிரியா

பருவமழை பாதிப்பு புகார்களுக்கு உடனடி தீர்வு: மேயர் பிரியா

சென்னை: ''வடகிழக்கு பருவமழையால், பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தப்படும்,'' என, மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பல்துறை அதிகாரிகளுடன் நேற்று, ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா ஆலோசனை நடத்தினார். பின், அவர் கூறியதாவது: மழைக்கால நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் மண் சேகரிப்பு தொட்டிகளில், துார்வாரும் பணி நடந்து வருகிறது. வளர்ச்சி பணிகள் நடக்கும் இடங்களில், உரிய தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆவின் பால் தடையின்றி கிடைக்கவும், மின் இணைப்பு பெட்டிகளில் பாதுகாப்பு நடவடிக்கையும் உறுதி செய்யப்படும். மாநகராட்சியின் 1913 என்ற புகார் எண்ணில், 150 இணைப்புகள் உள்ளன. இதற்காக, 180 பேர் பணியாற்றி வருகின்றனர். சமூக வலைதளங்களில் பெறப்படும் புகார்களுக்கும் உடனடி தீர்வு ஏற்படுத்தும் வகையில், 25 பேர் பணியாற்றுகின்றனர். மேலும், மாநகராட்சி, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு, காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து, பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை