உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு ஆள்மாறாட்ட பெண் சிக்கினார்

ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு ஆள்மாறாட்ட பெண் சிக்கினார்

சென்னை: ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டார். அய்யப்பன்தாங்கல், மவுன்ட் பூந்தமல்லி டிரங்க் சாலையைச் சேர்ந்தவர் பரிமளா நாயகி, 59. இவர், கடந்த 2021ம் ஆண்டு மே 17ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், 'பள்ளிக்கரணை, எல்.ஐ.சி., நகர் 5வது பிரதான சாலையில், 6,400 சதுரடி காலி மனை உள்ளது. 'அவற்றை விற்பனை செய்ய இருந்த நிலையில், அதில் 3,200 சதுரடி இடத்தை 2019ம் ஆண்டு சிலர் அபகரித்ததுடன், 'பஞ்சாப் நேஷனல் பேங்க் ஹவுசிங் பைனான்சில்' அடமானம் வைத்துள்ளது தெரிய வந்தது. 'அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்து இருந்தார். விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ மொபைல்ஸ் பைனான்ஸ் தொழில் செய்யும் ரமேஷ், தனியார் நிறுவன ஊழியர் பிரேம்குமார் மற்றும் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் குஷால் சந்த் ஆகிய மூவரையும், 2021ம் ஆண்டு கைது செய்தனர். நிலத்தின் உரிமையாளர் போல ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட சுமதி, 49, என்பவர், ஐந்து ஆண்டுகளாக தேடி வந்த நிலையில், நேற்று சிட்லப்பாக்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N S
அக் 25, 2025 16:41

நான்கு ஆண்டுகளுக்கு பின்பு சிக்கினார். முன்பு பேருந்தில் திருடி பிடிபட்ட கட்சி நிர்வாகி "அது ஒரு பழக்கம் தான், அதனால் என்ன?" என்று சொன்னது நினைவிற்கு வருகிறது. முந்தைய ஆட்சியில் தப்பியவரை விடாது தேடி பிடித்த திராவிட மாடல் ஆட்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை