உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில கூடைப்பந்து போட்டி இந்தியன் வங்கி அபாரம்

மாநில கூடைப்பந்து போட்டி இந்தியன் வங்கி அபாரம்

சென்னை, ஜூன் 28-மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், அரையிறுதி முதல், 'லீக்' சுற்றில், இந்தியன் வங்கி, 87- 49 என்ற கணக்கில் தமிழக போலீசை வீழ்த்தியது. மேயர் ராதாகிருஷ்ணன் கிளப் சார்பில், மாநில அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டி, எழும்பூரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.போட்டியில், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமான வரி, ஜேப்பியார் பல்கலை, லயோலா உள்ளிட்ட ஆண்களில் 34 அணிகள், பெண்களில் 14 அணிகளும் பங்கேற்றுள்ளன.ஆண்களுக்கான அனைத்து 'நாக் அவுட்' போட்டிகள் முடிவில், இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., வங்கி, எஸ்.டி.ஏ.டி., - தமிழக போலீஸ் உள்ளிட்ட நான்கு அணிகள் அரையிறுதி லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதேபோல், பெண்களில் ஜேப்பியார், ரைசிங் ஸ்டார், எஸ்.டி.ஏ.டி., - தமிழக போலீஸ் ஆகிய அணிகள், அரையிறுதி நாக் அவுட் ஆட்டங்களுக்கு தகுதி பெற்றன.நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான முதல் லீக் சுற்றில், இந்தியன் வங்கி மற்றும் தமிழக போலீஸ் அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், 87 - 49 என்ற கணக்கில் இந்தியன் வங்கி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில், ஐ.ஓ.பி., வங்கி அணி 87 - 61 என்ற கணக்கில், எஸ்.டி.ஏ.டி., அணியை தோற்கடித்தது. பெண்களுக்கான நாக் அவுட் சுற்றில் ரைசிங் ஸ்டார் அணி, 60 - 34 என்ற கணக்கில் ஜேப்பியார் அணியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை