உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மஸ்கட்டுக்கு நேரடி விமானம் சேவை துவங்குது இண்டிகோ

மஸ்கட்டுக்கு நேரடி விமானம் சேவை துவங்குது இண்டிகோ

சென்னை, சென்னையில் இருந்து ஒமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டுக்கு, தினசரி மற்றும் வாராந்திர அடிப்படையில், விமானங்கள் இயக்கப்படுகின்றன.சென்னையில் இருந்து ஓமன் ஏர், சலாம் ஏர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமான நிறுவனங்கள் மட்டும் நேரடி விமான சேவையை வழங்கி வருகின்றன.இண்டிகோ நிறுவனம் மும்பை அல்லது ஹைதராபாத் வழியாக மஸ்கட்டுக்கு விமானங்கள் இயக்கி வந்தது.இந்நிலையில், சென்னையில் இருந்து மஸ்கட்டுக்கு வரும் ஜூன் 16 முதல் நேரடி விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் துவங்குகிறது.திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்படும். கூடுதல் விபரங்களை, goindigo.comஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை