வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள்விளையாட்டு அரங்கம்
சென்னை:வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கை:வேளச்சேரி ரயில் நிலையத்தின் காலியாக உள்ள இடத்தில், பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய விளையாட்டு மையம் அமைக்க, சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது. இங்கு அமைக்க உள்ள உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டுகள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.இந்த உள்விளையாட்டு அரங்கு அமைக்க, டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான, முழு தகவல்களை, www.ireps.gov.inஎன்ற இணையதளத்தில் பார்த்து விண்ணப்பிக்கலாம்.இங்கு, டேபிள் டென்னிஸ், பூப்பந்து, ஜிம்னாசியம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கபடி, கேரம், செஸ், வாலிபால், யோகா, ஸ்னோ பவுலிங், கராத்தே, டேக்வாண்டோ, ஜூடோ, குத்துச்சண்டை, பளு துாக்குதல், பில்லியர்ட்ஸ் போன்ற பலதரப்பட்ட உள் மற்றும் வெளி அரங்க விளையாட்டுகளை நடத்த அனுமதிக்கப்படும்.தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் மட்டுமே, இந்த விளையாட்டு மையப்பணியில் அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.