மேலும் செய்திகள்
வடவள்ளியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
12-Mar-2026
சென்னை:சென்னையில் கட்டட அனுமதி பெறும்போது செலுத்த வேண்டிய உள்கட்டமைப்பு வசதி கட்டணம், சதுர மீட்டருக்கு, 290 ரூபாயாக இருந்து, 319 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. நகர், ஊரமைப்பு சட்டப்படி, கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதில், 10,000 சதுரடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி, 10,000 சதுர அடி வரையிலான பரப்பளவு கொண்ட, அடித்தளத்துடன், மூன்று தளம் அல்லது தரை தளத்துடன் இரண்டு தளம் வரையிலான கட்டடங்களுக்கு, மாநகராட்சி ஒப்புதல் வழங்குகிறது. இதற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நிலையில், குடிநீர் வடிகால் வாரிய வசதிகள் செய்வதற்காக, உள்கட்டமைப்பு வசதி கட்டணம் வசூலிக்கப்படும். சதுர மீட்டருக்கு அதாவது, 10.7 சதுரடிக்கு, 290 ரூபாய் என இருந்த கட்டணம், 2026 - 27ம் நிதி ஆண்டில், 319 ரூபாயாக வசூலிக்கப்படும் என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார். இதே போன்று, பிற மாநகராட்சிகளும் தனித்தனியாக உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. இந்த கட்டண உயர்வு, 10,000 சதுரடிக்கு மேற்பட்ட அடுக்குமாடி கட்டடங்களுக்கும் பொருந்தும். இதற்கான உத்தரவு சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ***
12-Mar-2026