சர்வதேச கராத்தே: தமிழர்களுக்கு பதக்கம்
சென்னை, ஓமன் நாட்டில் உள்ள அல் புரைமி நகரில், கடந்த 27, 28ம் தேதிகளில், சர்வதேச ஓபன் கராத்தே போட்டிகள் நடந்தன.ஈரான், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், எகிப்து, இந்தியா உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் பங்கேற்றனர். அவர்களில், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற, விஷால் தங்கப்பதக்கம் வென்றார்.சீனியர் பிரிவில் பங்கேற்ற தினேஷ் கார்த்திக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதே பிரிவில் பங்கேற்ற ராகுல், சஞ்சீவ் கிருஷ்ணா ஆகியோரும், ஜூனியர் பிரிவில் பங்கேற்ற விஜயபாஸ்கர், வர்ஷா ஆகியோரும், வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.வெற்றி பெற்ற வீரர், வீராங்கனையரையும், பயிற்சியாளர் ரவியையும் கராத்தே சங்கத்தினர் வாழ்த்தி உள்ளனர்.