சர்வதேச சிலம்ப போட்டி புதுச்சேரியில் துவங்கியது
புதுச்சேரி, இந்திய இளையோர் பாரம்பரிய சிலம்ப சங்கம் சார்பில், சர்வதேச அளவிலான பாரம்பரிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி, புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம், மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லுாரியில் நேற்று துவங்கியது.விழாவில், சென்னை வி.ஜி.பி., குழும தலைவர் வி.ஜி.சந்தோசம், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி சேர்மன் தனசேகரன், தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி டிரஸ்ட் சிலம்பம் டிப்ளமா கல்லுாரி இயக்குனர் திருமாறன், பீஸ் ஆப் டைமர் பல்கலை ஆலோசகர் ஐசக் பாஸ்கரன், தொழிலதிபர் முகமது இட்ரிஸ் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன் வரவேற்றார்.மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி முதல்வர் மலர்க்கண் குத்துவிளக்கேற்றி, போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 முதல் 21 வயதிற்குட்பட்ட வீரர் - வீராங்கனையர் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.டோ பெஸ்ட் கல்சுரல் ஈவன்ட்ஸ் இயக்குனர் நிர்மல்ராஜ் நன்றி கூறினார்.இப்போட்டியின் பரிசளிப்பு விழா இன்று நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் தர்மசாஸ்தா, பொதுச்செயலர் வேல்முருகன், அமைப்புச் செயலர் சுந்தரவடிவேலன் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.