மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
30-Jun-2025
சென்னை:ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு இலவச உதடு, அண்ணப்பிளவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.நாட்டின் முன்னணி மைக்ரோ பைனான்ஸ் நிறுவனமான கிரெடிட் அக்சஸ் கிராமின் நிறுவனத்தின் அறக்கட்டளை மற்றும் சென்னை சவீதா பல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இணைந்து, ஏழை குழந்தைகளுக்கான இலவச உதடு, அண்ணப்பிளவு அறுவை சிகிச்சை திட்டத்தை, செயல்படுத்த உள்ளன.இத்துடன், ரோட்டரி இன்டர்நேஷனல் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சென்னை ஆகியவை இணைந்து, நான்கு மாதங்கள் முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு, இந்த அறுவை சிகிச்சை வழங்கப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிமுகம் சமீபத்தில் நடந்தது.இது குறித்து, கிரெடிட் அக்சஸ் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் கணேஷ் நாராயணன் கூறியதாவது:சவீதா பல் மருத்துவ கல்லுாரி மற்றும் ரோட்டரியுடன் இணைந்து, செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது, குழந்தைகள் வாழ்வதற்கான நியாயமான வாய்ப்பை உருவாக்கும் முயற்சி. சமூகத்தில் அவர்களுக்கான மரியாதை, தன்னம்பிக்கை, எதிர்காலத்தை மீட்டெடுக்கும் வகையில், ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு பலன் தரக்கூடியதாக இத்திட்டம் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
30-Jun-2025